Sunday, Jul 6, 2025

இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ்

Discharge Snake Vava Suresh Catcher
By Thahir 3 years ago
Report

வாவா சுரேஷ் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும்,

அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு தகவல் வந்துள்ளது.

அதன்படி, அந்த வீட்டுக்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ், அங்கு பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேஷின் வலது காலில் கடித்தது. அதன் தொடர்ச்சியாக, சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார்.

இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ் | Vava Suresh Snake Catcher Discharge

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ் | Vava Suresh Snake Catcher Discharge

தற்போது வாவா சுரேஷ் முழுவதுமாக குணமடைந்து விட்டதால் அவரை மருத்துவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்ய உள்ளனர்.

You May Like This