ஹிட் அடித்த வாத்தி கம்மிங்..ட்விட்டரில் ட்ரெண்டிங்!
விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட் அடித்தது.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பெரியளவில் ஹிட் அடித்தது.
இத்திரைப்படம் வெளியான பின்பு வாத்தி கம்மிங் பாடல் மிகவும் வைரலானது. பல தரப்பட்ட மக்களையும் இந்தப் பாடல் சென்றடைந்தது.
குறிப்பாக திரைப்பிரபலங்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரை இந்தப் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது இந்த நிலையில் தற்போது யூடியூப் தளத்தில் வாத்தி கம்மிங் பாடலை இதுவரை 225 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்தாண்டு வெளிவந்த பாடல்களில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
ஆகவே தற்போது ட்விட்டர் தளத்தில் #VaathiComingஎன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.