‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷ்ரேயஸ் ஐயர் - வைரலாகும் வீடியோ

dance viral video vaathi comming song shreyas iyer
By Anupriyamkumaresan Sep 12, 2021 04:38 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

டெல்லி கேபிட்டல்ஸ் முகாமில் ‘வாத்தி கம்மிங்’பாடலுக்கு ஷ்ரேயஸ் ஐயர் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தயாராகி வருகிறார்.

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷ்ரேயஸ் ஐயர் - வைரலாகும் வீடியோ | Vathi Comming Song Player Shreyash Iyer Dance

தற்போது டெல்லி அணியுடன் அமீரகத்தில் முகாமிட்டுள்ளார் அவர். இந்நிலையில் டெல்லி அணியின் புத்துணர்வு நிகழ்வில் அணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பங்கேற்ற ஷ்ரேயஸ், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.