தமிழ்நாடு வாட் வரியை குறைக்காததால் தான் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி..!
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்காத தன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி நாளை முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில்,அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த கொரோனாவை குறைக்க வேண்டும் கூறினார்.
அதன் பின் அந்த கூட்டத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை பற்றி பேச விரும்புவதாக கூறி பேசினார். பெட்ரோல்,டீசல் விலையை குறைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது.
இதே போல மாநிலங்களும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளது.ஆனால் மத்திய அரசிற்கு செவி சாய்காமல் தமிழ்நாடு,மகாராஷ்டிரா,மேற்குவங்கம்,தெலங்கானா,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்கள் குறைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு தெரிவித்தும் 7 முதல் 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் குடிமக்களின் மீது கூடுதல் சுமையை சுமத்தியிருப்பதாக குற்றம்சாட்டினார்.
எனவே மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனென்றால் மத்திய அரசு மீது சில மாநிலங்கள் தொடர்ச்சியாக இந்த விலை உயர்வு தொடர்பான விமர்சனங்களை முன் வைத்ததன் மூலம் தான் இந்த கருத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.