‘வாட்’ வரி செலுத்துபவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
tngovernment
vat service
By Petchi Avudaiappan
‘வாட்’ வரி செலுத்துவதற்கான இணையதள சேவை இன்று 3 மணி நேரம் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மதிப்பு கூட்டு வரியை (வாட்) இணைய வழியாக செலுத்துவதற்கு https://ctd.tn.gov.in என்ற வணிக வரி இணையதளம் பயன்படுகிறது. இந்தநிலையில் வணிக வரி இணையதளத்தையும், கருவூலம் மற்றும் கணக்கு துறையின் இணையதளத்தையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையால் மேற்கண்ட இணையதள சேவை 23-ந்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை (3 மணி நேரம்) நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே மதிப்பு கூட்டு வரி செலுத்துவோர் தங்கள் வரியை 23-ந்தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் செலுத்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.