எங்க உறவில் எந்த பிரச்சினையும் இல்ல: ஜி.கே.வாசன் பேட்டி
அதிமுக - தமாகா உறவு சுமுகமாக இருக்கிறது, கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாகவே முடியும் என்று ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார். தமாகாவுடன் அதிமுக பேசுவதில் எந்த தயக்கமும் இருக்காது என தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக 3 கட்டங்களாக அதிமுக- தமாகா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.இந்த நிலையில் இன்று மீண்டும் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிந்து இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தேமுதிக விலகியதால் தமாகா விற்கு கூடுதல் இடம் ஒதுக்கபடலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜிகே.வாசன் அதிமுக - தமாகா உறவு சுமுகமாக இருக்கிறது, கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாகவே முடியும் என்று ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.