வெற்றிவாய்ப்பு அதிமுக கூட்டணிக்கே அதிகம் உள்ளது - ஜி.கே.வாசன்

election tamilnadu aiadmk vasan
By Jon Mar 10, 2021 03:08 PM GMT
Report

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு ஜி.கே.வாசன் பதில் கூறுகையில், 'இரண்டு முறை எங்கள் குழு, அதிமுக குழுவுடன் பேசியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தேன். எண்ணிக்கை, தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. வெற்றிக் கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது நிச்சயம் வருத்தம் அளிக்கிறது'என்றார். கூட்டணி வெற்றி குறித்து அவர் கூறும்போது, 'கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களின் எண்ணங்களை அதிமுக அரசு பிரதிபலித்து வருகிறது.

அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களைத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தி இருக்கிறது. எனவே, வெற்றி வாய்ப்பு அதிமுக கூட்டணிக்கே உள்ளது' என்று தெரிவித்தார்.