அதிமுக - த.மா.கா இடையே தொடரும் இழுபறி.! இன்று அவசர ஆலோசனை
அதிமுக - த.மா.கா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக - த.மா.கா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக-விடம், த.மா.கா 12 தொகுதிகள் கேட்ட நிலையில், அதிமுக 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக 177 தொகுதிகளுக்கு தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மேலும் கூட்டணி கட்சிகளான பாஜகவுக்கு 20 இடங்களும் பாமகவுக்கு 23 இடங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன.
இன்னும் 14 தொகுதிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் பாக்கி உள்ள நிலையில் அவை யாருக்கு ஒதுக்கப்படும் என்பது இன்று தெரிந்துவிடும்.