சிவகார்த்திகேயனுக்கு இடமில்லை - வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகம் அறிவிப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் VaruthapadathaValiparSangampart2
By Petchi Avudaiappan Oct 08, 2021 05:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

3, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப் பறவை படங்களில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்  மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. 

அந்த வெற்றியைத் தொடர்ந்து, பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன், சீமராஜா படங்கள் வெளிவந்தது. ஆனாலும் இன்றளவும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குநர் பொன்ராம் வெளியிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் படத்தின் 2 ஆம் பாகம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன செய்தியை குறிப்பிட்டு, “வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

பொன்ராமின் இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.