பிரபல சினிமா இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

Tamil Cinema Tamil Directors
By Karthikraja Jul 13, 2024 09:47 AM GMT
Report

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் ரவி சங்கர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ரவி சங்கர்

‘குதிரை' என்ற சிறுகதை மூலம் பாக்யா பத்திரிகையில் எழுத்தாளராக தனது பயணத்தை துவங்கியவர் ரவி சங்கர். இயக்குநர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

varusamellam vasantham director ravisankar

2002 ம் ஆண்டு மனோஜ் பாரதிராஜா, குணால் ஆகியோரின் நடிப்பில் 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ‘சூர்யவம்சம்' படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் நேற்றிரவு கே கே நகரில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனிமை மற்றும் பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

63 வயதான ரவி சங்கரின் மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. தற்போது போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.