மனிதனை சுமந்து செல்லும் ‘வருணா’ ட்ரோன் விமானத்தின் சோதனை ஓட்டம் - வைரலாகும் வீடியோ
இந்தியாவின் முதல் மனித ட்ரோன் (Human Drone) ‘வருணா’ விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மிக விரைவில் மனிதனை சுமந்து செல்லும் ஆளில்லா ‘வருணா’ விமானத்தை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.
‘வருணா’ மனித ட்ரோன் விமானம்
இந்தியாவின் முதல் மனிதனை சுமந்து செல்லும் ஆளில்லா "வருணா" என்ற விமானத்தை இந்திய ஸ்டார்ட்அப் சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ‘வருணா’ விமானம், இந்திய நாட்டின் முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன் விமானமாகும். இந்த விமானம் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து நிறுவனர் சாகர் டிஃபென்ஸ் கூறுகையில், ‘வருணா’ விமானத்தால் 25-30 கிமீ தூரம் வரை சுமார் 30 நிமிடங்கள் பறக்க முடியும். இதில் 100 கிலோ சரக்குகளை ஏற்றலாம். இந்த விமானம் செயலிழந்து விட்டால், அது மேலே வரக்கூடிய ஒரு பாலிஸ்டிக் பாராசூட்டைக் கொண்டு தரையிறங்கிவிடும். நகர்ப்புற காற்று இயக்கத்தை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றார்.
‘#Varuna’ country’s first human-carrying #drone, developed by the Indian startup Sagar #Defence Engineering, will soon be inducted into Indian Navy #ANI pic.twitter.com/eANBpRfuX5
— The National Bulletin (@TheNationalBul1) October 5, 2022