Tuesday, May 13, 2025

ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கும் தம்பி வருண் காந்தி..?

Rahul Dravid Indian National Congress BJP Uttar Pradesh Election
By Karthick a year ago
Report

அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் பாரம்பரியமான ஒரு தொகுதியாகவே மாறியுள்ளது.

அமேதி தொகுதி

உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதி நேருவின் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு தொகுதியாகவே இருந்து வருகின்றது.

varun-gandhi-to-contest-against-rahul-in-amedhi

கடந்த 1980-ஆம் ஆண்டு முதன் முதலில் சஞ்சய் காந்தி இந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானதை தொடர்ந்து, 1981-1991 வரை ராஜீவ் காந்தியும், 1999-இல் சோனியா காந்தியும் அதனை தொடர்ந்து 2004 முதல் 2019 வரை ராகுல் காந்தியும் இந்த தொகுதியில் தான் வெற்றி பெற்று எம்.பி'யாகி இருக்கிறார்கள்.

பிரதமரே இல்லாதபோது எதுக்கு அனைத்துக்கட்சி கூட்டம்? - ராகுல் காந்தி

பிரதமரே இல்லாதபோது எதுக்கு அனைத்துக்கட்சி கூட்டம்? - ராகுல் காந்தி

தம்பி வருண் காந்தி..? 

கடந்த 2019-ஆம் ஆண்டு கூட அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு தோற்று போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்த தொகுதி சிறப்பு கவனத்தை ஒவ்வொரு தேர்தலின் போதும் பெற்று விடுகிறது.

varun-gandhi-to-contest-against-rahul-in-amedhi

இம்முறை மீண்டும் ராகுல் காந்தி அமேதியில் தான் போட்டியிட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தமான வலியுறுத்தலை வைத்து வருகின்றனர்.

varun-gandhi-to-contest-against-rahul-in-amedhi

இந்த சூழலில் தான், ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவின் சார்பில் அமேதி தொகுதியில் வருண் காந்தியை களமிறக்க திட்டமிடப்படுவதாக தகவல் வெளியாகின. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கருத்துக்களை வருண் காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார்.