சாம்பியன்ஸ் டிராஃபிக்கான வாய்ப்பு.. வருண் சக்கரவர்த்தி சொன்ன அதிர்ச்சி தகவல்!
சாம்பியன்ஸ் டிராஃபிக்கான வாய்ப்பு குறித்து வருண் சக்கரவர்த்தி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 3-ஆவது முறையாக வென்ற அணி என்ற புதிய வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபிக்கான வாய்ப்பு குறித்து வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி
அதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்குச் செல்ல இருந்தேன். அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர்.
பின் ஒருநாள் தொடர் முடிந்து வீட்டிற்குக் கிளம்பலாம் என இருந்தபோது சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாட துபாய் செல்லப் போகிறோம் என்றனர். இப்போது கோப்பையை வென்றுவிட்டோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.