‘வருண் சக்ரவர்த்தியை சாதாரணமாக எடைபோடாதீர்கள்’ - பாராட்டி தள்ளும் பிரபல வீரர்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் வருண் சக்ரவர்த்தி  கலக்கப் போகிறார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில்  தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு  அமீரக மைதானங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதனால் எதிரணி வீரர்களுக்குக் கடும் நெருக்கடியை வருண் ஏற்படுத்துவார். சர்வதேசப் போட்டிகளில் வருணுக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும் அவர் ஆதிக்கம் செலுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். 

அதே போல் வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் அணியில் இருப்பது விராட் கோலியின் தெரிவுகளை விரிவு படுத்தியுள்ளது. எனவே நீண்ட காலமாக காத்திருக்கும் இந்த உலகக்கோப்பை நடைபெற மேலும் காத்திருக்க முடியாது என ரெய்னா கூறியுள்ளார். 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்