பிக்பாஸ் போட்டியாளர் அக்ஷராவுக்கு கிடைத்த பட வாய்ப்பு - ஹீரோ யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அக்ஷரா புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து ஒரே நாளில் வெளியேறிய அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் புதிய படமொன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இருவரும் சண்டை இல்லாமல் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள் என்று பலரும் பாராட்டினர். . கடுமையான டாஸ்க்குகளை எளிதாக எதிர்கொண்ட அக்ஷரா ரெட்டிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதேபோல் பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும் எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தாமல் இயல்பாக வருண் நடந்து கொண்டது பலரையும் கவர்ந்தது.
ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வருண் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அன்று திரையிடப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தற்போது வருண் , அக்ஷரா இருவருமே ஜோடியாக நடிப்பதற்காக ஒரு புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அவர்களது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.