திடீரென திருமணகோலத்தில் வந்த வருண் - அக்ஷரா - வைரலாகும் வீடியோ - ஷாக்கான ரசிகர்கள்
பிரபல விஜய் டிவியில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவடைந்தது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து அக்ஷரா, வருண் ஆகிய இரு போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்கள் இந்நிகழ்ச்சியிலிருந்து ஒரே நாளில் ஜோடியாக வெளியேற்றபட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளியே வந்த இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவும், அன்பும் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில், இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, பார்ட்டி, ஹோட்டல் என இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக சுற்றி வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேபோல், தற்போது இவர்கள் இருவரும் திருமணக்கோலத்தில் வருண் மற்றும் அக்ஷரா வலம் வரும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன வருணும், அக்ஷராவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று கேள்ளி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் விளம்பர நிகழ்ச்சிகாக இருவரும் மாடல்களாக நடித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.