வாரிசு திரைப்படத்தின் பிரபலம் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்

Vijay Tamil Cinema Varisu
By Thahir Jan 06, 2023 05:35 AM GMT
Report

தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ள சுனில் பாபுவின் திடீர் மரணம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சுனில் பாபு உயிரிழப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வாரிசு படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ள சுனில் பாபுவின் திடீர் மரணம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திரைத்துறையினர் இரங்கல்

திரைத்துறையில் கலை இயக்குனராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் சுனில் பாபு. 50 வயதாகும் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் பிரபலம் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல் | Varisu Movie Star Passed Away

இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுனில் பாபு, நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.