வாரிசு க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் : சீக்ரெட் சொன்ன பிரகாஷ்ராஜ்
‘வாரிசு’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கியுள்ளார். முதல்முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
பிரகாஷ்ராஜ் பராட்டு
இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ் வாரிசு’ படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன்.பொதுவாக வயதானால் எல்லோரும் அனுபவசாலியாக மாறுவார்கள்.
ருசிகர தகவல்
ஆனால் விஜய் அழகாக மாறி வருகிறார். நான் ஒரு விஜய் ரசிகன். ஒரு நடிகராக 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் அசுர வளர்ச்சியை பார்க்க முடிகிறது.
தனது ரசிகர்களுக்காக அனைத்தையும் செய்கிறார் நடிகர் விஜய். அதேநேரம் தனது படங்களின் வெற்றிக்கு காரணம் ரசிகர்கள் என்று கூறுகிறார்.
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து கூறிய அவர், விஜய்யின் நடிப்பால் நீங்கள் எமோஷனலாக திக்குமுக்காடிப்போவீர்கள் என்றும், வாழ்க்கை மீதான நேர்மறை எண்ணங்களை ‘வாரிசு’ விதைக்கும். இந்த கால இளைஞர்களுக்கு தேவையாக படம் ‘வாரிசு’ என அவர் கூறினார்.