விஜய்யுடன் ஜாலியா வண்டியில் சென்ற யோகிபாபு... - வைரலாகும் வீடியோ...!

Vijay Viral Video Varisu
By Nandhini Jan 28, 2023 01:03 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் யோகி பாபு ஜாலியா வண்டியில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும். இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

varisu-actor-vijay-viral-video-yogi-babu

விஜய்யுடன் ஜாலியா வண்டியில் சென்ற யோகிபாபு

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில்,

நடிகர் விஜய்யுடன் யோகிபாபு ஜாலியா வண்டியில் சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.