இணையதளத்தை கலக்கும் நடிகர் விஜய்யின் 'தீ தளபதி' நடன பயிற்சி வீடியோ...! - தெறிக்க விடும் ரசிகர்கள்...!
‘வாரிசு’ படத்தில் இடம் பெற்ற 'தீ தளபதி' பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்ட நடிகர் விஜய்யின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘வாரிசு’ படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.
இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.
இதனையடுத்து, கடந்த 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.
விஜய்யின் 'தீ தளபதி' நடன பயிற்சி வீடியோ
நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம் பிடித்த ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், ‘தீ தளபதி’ பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்ட நடிகர் விஜய்யின் படப்பிடிப்பு வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
Thee thalapathy song bts thaliva thalapathy vijay anna?????❤❤???❣️???????????????????????? @actorvijay #MrNumberOneVIJAY #theethalapthy #Varisu #Megablockbustervarisu #Thalapathy67? @directorvamshi @MusicThaman pic.twitter.com/kZ4uHZoVOL
— KARTHIK VIJAY (@KARTHIK95614022) January 23, 2023