25வது நாள் வெற்றி - ஒரே நாளில் ‘வாரிசு’, ‘துணிவு’ படத்தின் போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர்...!

Viral Photos Varisu Thunivu
By Nandhini 1 மாதம் முன்
Report

போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய், அஜித். இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதனையடுத்து சில ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரது படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில்‘வாரிசு’ திரைப்படமும், நடிகர் அஜித் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படமும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இதனையடுத்து, கடந்த 11ம் தேதி அதிகாலையிலேயே இரு நடிகர்களின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். ஆடல், பாடல் என்று பட்டையை கிளப்பினர். ‘வாரிசு’, ‘துணிவு’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் சாதனையைப் படைத்து வெற்றி பெற்றுள்ளது.

varisu-actor-vijay-thunivu-ajith-poster

போஸ்டர் வெளியீடு

இந்நிலையில், 25வது நாளில் ‘வாரிசு’, ‘துணிவு’ திரைப்படத்தின் வெற்றியையடுத்து, படக்குழுவினர் ஒரே நாளில் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.        


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.