சென்னையில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த கொள்ளையன் கைது
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை.சி.எஃப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓடத்தொடங்கியுள்ளார்.
அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரை சோதனை செய்ததில் அவரிடம் ஸ்குரு ட்ரைவர், கத்தி, இரும்பு ராடு, சுத்தியல் இருப்பதை கண்டறிந்தனர். அந்நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் ஓட்டேரியை சேர்ந்த ஜெபராஜ் என்பது தெரிய வந்தது.
இவர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, கதவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.அண்ணா நகர், அமைந்தகரை, வில்லிவாக்கம், ஐ.சி.எஃப், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளததும் மேலும் அப்பகுதி காவல் நிலையங்களிலும் தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 95 சவரன் நகையை போலீசார் மீட்டுள்ளனர்.