அரசியலுக்கு வரும் வாரிசு நடிகை - ஜெயலலிதாதான் ரோல் மாடலாம்

Varalaxmi Sarathkumar J Jayalalithaa Tamil Actress
By Karthikraja Jan 13, 2025 03:47 PM GMT
Report

நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டு பாஜக உறுப்பினராக தொடர்கிறார். 

varalaxmi with sarathkumar

இவரது மகள் வரலட்சுமியும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த மதகஜ ராஜா தற்போது திரைக்கு வந்துள்ளது. 

அரசியல் 

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வரலட்சுமி தனது அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். சினிமாவில் சில படங்களை இயக்க ஆசை உள்ளது. அதை முடித்து விட்டு அரசியலுக்கு வருவேன். ஜெயலலிதாதான் எனக்கு ரோல் மாடல். 2 நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவின் பேட்டியை எனது கணவருடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். 

வரலட்சுமி சரத்குமார்

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதெல்லாம் கிடையாது. நடிகர் , நடிகைகள் குறித்து சமூகவலைதளங்களில் மோசமாக பேசுகிறார்கள். நாங்கள் இந்த நிலையை அடைய எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது" என பேசினார்.