அப்பா முன்னாடியே அதை செஞ்சாரு - காதலர் குறித்து வரலட்சுமி பளீச்!

Varalaxmi Sarathkumar Tamil Cinema
By Sumathi May 02, 2024 05:30 PM GMT
Report

வருங்கால கணவர் குறித்து வரலட்சுமி பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்பா முன்னாடியே அதை செஞ்சாரு - காதலர் குறித்து வரலட்சுமி பளீச்! | Varalaxmi Sarathkumar About Lover

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

2வது மனைவியாகும் வரலட்சுமி; ஏற்கனவே திருமணம், 15 வயதில் மகள் - யார் இந்த நிக்கோலய்?

2வது மனைவியாகும் வரலட்சுமி; ஏற்கனவே திருமணம், 15 வயதில் மகள் - யார் இந்த நிக்கோலய்?

விரைவில் திருமணம்..

விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வருங்கால கணவர் குறித்து பேசியுள்ள வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ்வை 16 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து பேசியிருக்கிறேன்.

அப்பா முன்னாடியே அதை செஞ்சாரு - காதலர் குறித்து வரலட்சுமி பளீச்! | Varalaxmi Sarathkumar About Lover

அப்போது அவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். இந்த சமயத்தில் இருவருக்கும் இடையே எந்த ஒரு நெருக்கமும் பழக்கமோ கிடையாது. பல ஆண்டுகள் கழித்து எங்களது குடும்பம் நார்வைக்கு ஃபேமிலி டூர் சென்ற போது என் பெற்றோர் முன்னிலையில் நிக்கோலாய் காதலை சொன்னார்.

அவர் என் மீது வைத்திருந்த பாசம், அக்கரை, என் ப்ரொபஷன் மீது கொண்டிருந்த ஈடுபாடு போன்றவற்றை பார்த்த பிறகு தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது எனத் தெரிவித்துள்ளார்.