திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரலட்சுமி சரத்குமார் கணவருடன் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் நிக்கோலாய் சச்தேவ்வுடன் சாமி தரிசனம் செய்தார் வரலட்சுமி சரத்குமார்.
நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டைக்கோழி-2 என அடுத்தடுத்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

தமிழ் தவிர தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார், தொடர்ந்து தன்னுடைய நீண்ட கால தோழரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் நிக்கோலாய் சச்தேவ்- வரலட்சுமி சரத்குமார் தம்பதியினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலிலில் ராகு கேது பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
இஸ்ரேலில் உள்ள 7,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : அரச தரப்பின் அறிவிப்பு IBC Tamil