நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யாரு அவரா?

Sarathkumar S Varalakshmi Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Mar 02, 2024 12:43 PM GMT
Report

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகர் சரத்குமார் - முதல் மனைவி சாய தேவியின் மகளான வரலக்ஷ்மி சரத்குமார் 'போடா போடி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யாரு அவரா? | Varalakshmi Sarathkumar Engagement

இதனையடுத்து நடித்த தாரை தப்பட்டை படத்தில், தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார். தொடர்ந்து விக்ரம் வேதா, எச்சரிக்கை, சர்க்கார், கன்னிராசி, கன்னித்தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நிச்சயதார்த்தம் 

கடைசியாக வரலக்ஷ்மி நடிப்பில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படம் வெளியானது. இந்நிலையில் வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யாரு அவரா? | Varalakshmi Sarathkumar Engagement

நிக்கோலாய் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.