சூர்யாவிடம் ரூ.5 கோடி கேட்ட வன்னியர் சங்கம் - ட்விட்டரில் பாமகவை வைத்து ரசிகர்கள் செய்த வைரல் சம்பவம்

PMK பாமக vanniyarsangam
By Petchi Avudaiappan Nov 16, 2021 07:55 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நடிகர் சூர்யாவிடம் வன்னியர் சங்கம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்ட விவகாரத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் பாமகவை விமர்சித்து வருகின்றனர். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். 

அதேவேளையில் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக கடும் சர்ச்சைகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ரூ.5 கோடி  7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஸ்டேக்கில் பல்வேறு விதவிதமான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.  அவற்றில் சில: