”வன்னியர் 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானதே” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது. இதனை ஏற்று தமிழக அரசு 10.5% இடஒதுக்கீட்டை வழங்கியிருந்தது. மேலும் ஆறு மாதங்கள் கழித்து சாதிவாரி கணக்கெடுப்பு வந்த பிறகு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதனால் பிற சமூகங்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி நிலவுவதாக கருத்துகள் வந்தன மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செனடார்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தின் போது ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ”68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு என்றும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5 இட ஒதுக்கீடு என்றும், இதர சமுதாயத்திற்கு 2.5 இட ஒதுக்கீடு என்றும் கூறி வருகின்றனர். அது உண்மை அல்ல.”
”மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மக்களிடம் செல்வாக்கு பெறாதவர்கள் இதன் மூலம் பெற நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. டி.என்.டி என்ற நீண்ட நாள் கோரிக்கையானது.
ரயில்வே, ஐஐஎஸ், வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, கல்வி தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பெற்றிடும் வண்ணம் இந்த 45 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணமும் டிஎன்டி சான்றிதழை பெற்று தந்த ஒரே அரசு அம்மாவின் அரசு ஆகும். அதை வழங்கியவர் முதல்வரும் துணை முதல்வரும் ஆவார்கள்.

திமுக ஆட்சியில் இருந்தபோது மக்கள் மீது அன்பு இருந்தால் 68 சமுதாய மக்களின் கோரிக்கையான டி.என்.டியை நிறைவேற்றி தந்திருக்கலாமே? அதிமுக செல்வாக்கை யாரும் குறைத்து நினைத்தால் அது பகல் கனவாகவே போய்விடும். 68 சமுதாய டி என் டி அங்கீகாரத்தை வழங்கி, 50 ஆண்டு கால கனவை நனவாக்கியது இரட்டை இலை சின்னம் ஆகும் என்று பேசினார்.