வன்னியர் 10.5% இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை - தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக எம்.பி.சி இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டது. அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவின் கோரிக்கைய் ஏற்று தமிழக அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியது.
இதனை தேர்தல் நேர நாடகம் என்றும் சட்டப்படி செல்லாது என்று பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வந்தன. வன்னியர் இடஒதுக்கீட்டால் எம்.பி.சி பிரிவில் இருக்கும் மற்ற சமூகத்தினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் மனுதாரரின் கோரிக்கை நிராகரித்து தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானதே என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்து வந்தது சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.