பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - அமைச்சர் வன்னியரசு உறுதி

PMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 01, 2026 09:16 AM GMT
Report

vanniarasu says vck wont be in pmk alliance: பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என அமைச்சர் வன்னியரசு விளக்கமளித்துள்ளார்.

தவெக கூட்டணியில் பாமக?

தமிழ்நாட்டில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக எந்த கட்சிக்கு ஆதரவில்லை என அறிவித்துள்ளது. 

பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - அமைச்சர் வன்னியரசு உறுதி | Vanniarasu Says Vck Wont Be In Pmk Alliance

இதனையடுத்து, இடைத்தேர்தலுக்கு பின்னர் தவெக கூட்டணியில் பாமக இடம்பெறும் எனவும், சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியானது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், கூட்டணி குறித்து முதல்வரும் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள் என கூறினார்.

அமைச்சர் வன்னியரசு விளக்கம்

ஆனால், இந்த தகவல் வதந்தி என சௌமியா அன்புமணி விளக்கமளித்தார்.

இது குறித்து விசிகவை சேர்ந்த அமைச்சர் வன்னியரசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "சாதியவாத பாமகவோடும், மதவாத பாஜகவோடும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் தலைவர் திருமாவளவன் அறிவித்துவிட்டார். 

பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - அமைச்சர் வன்னியரசு உறுதி | Vanniarasu Says Vck Wont Be In Pmk Alliance

அந்த நிலைப்பாட்டில் விசிக இன்றும் உறுதியாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.