அமைச்சராகிறார் வன்னியரசு
தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் விசிக பங்குபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ள நிலையில் அமைச்சராகிறார் வன்னியரசு.
நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன, மேலும் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புவதாக ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்கும் என அறிவித்தது.
இதன்படி திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராக பதவியேற்பார் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய முக்கிய துறைகள் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.