வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை வழக்கு - மேலும் 4 பேர் கைது
வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி மாஜக நிர்வாகி வசீம் அகரம் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தை தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டி சத்திரம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார்,ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் ஜீவா நகர் பகுதியில் டீல் இம்தியாஸ் என்பவர் கிடங்கில் சோதனை நடத்தி 8 கிலோ கஞ்சா 10 பட்டா கத்திகள்,செல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்ததும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கஞ்சா பதுக்கல் குறித்து காவல் துறைக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்தாக கருதி டீல் இம்தியாஸ் வசீம் அக்ரமை திட்டமிட்டு கொலை செய்ய கூலி படையை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
கொலை சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பணியிடமற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நாகராஜன் என்பவர் நியமித்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் செல்வகுமார், முனீஸ்வரன், சத்தியசீலன், அகஸ்டின், அஜய், பிரவீன் குமார் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்திலும்,முக்கிய குற்றவாளியான கருதப்பட்ட டீல் இம்தியாஸ் சிவகாசி நீதி மன்றதில் சரணடைந்தனர்.
தொடர்ந்து விசாரணை அதிகாரி நாகராஜன் நடத்திய விசாரணையில் ஆயுதங்கள் கொண்டு சேர்த்தல் , கொலை செய்ய ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து, கொலைக்கு உதவியாக இருந்ததாக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நயீம் பாஷா, பைசல் அகமது,யூசுப் ஜமால், முகமது அலி ஆகிய 4 பேரை கைது சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையில் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என்று காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.