வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை - டிஎஸ்பிக்கு மெமோ
வாணியம்பாடியில் கடந்த ஜூலை மாதம் 26.07.2021 கஞ்சா பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளியை பிடிக்க தவறிய வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வத்திற்கு விளக்கம் கேட்டு மெமோ (MEMO) வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 26.07.2021 அன்று ஜீவா நகர் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா,10 பட்டாக்கத்தி,10 செல்போன்கள் பறிமுதல் 3 பேர் ரஹீம் கைது செயதனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் மற்றும் செல்வகுமார் ஆகியோரை கைது செய்யதவறியதால் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை நடந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வத்திற்கு விளக்கம் கேட்டு மெமோ(MEMO) வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே. பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்தார் தலைமைச்செயலாளர் இறையன்பு