வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் செவிலியர் உயிரிழந்த பரிதாபம்..!

covid death nurse vaniyambadi
By Anupriyamkumaresan May 28, 2021 02:13 PM GMT
Report

வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ரங்கநாயகி, கடந்த 20 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 3 ஆண்டுகளாக நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதி சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இதில், இவர் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்துள்ளார். இவரது இழப்பு அப்பக்குதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் செவிலியர் உயிரிழந்த பரிதாபம்..! | Vaniyambadi Covid Nurse Death