வாணியம்பாடி தனியார் மருத்துவமனை அருகே நின்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டு
வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டு இருந்த விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் லாவகமாக திருடி செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி. டிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கபில்தேவ் என்பவர் தனது மனைவி உலநலகுறைவு காரணமாக தன்னுடைய மனைவியை வாணியம்பாடி நியூ டவுன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தன்னுடைய இரு சக்கர வாகனத்தை மருத்துவ மனைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த தன்னுடைய மனைவியை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் அங்கு இங்கும் சிறிது நேரம் நோட்டமிட்டு யாரும் இல்லை என்பதை அறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை சைட் லாக்கிணை உடைத்து லாவகமாக திருடி செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகி அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இருசக்கர வாகன உரிமையாளர் கபில் தேவ் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டிவி பதிவினை வைத்து இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.