நடிகை வனிதா விஜயகுமாரின் புது பிசினஸ் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

By Petchi Avudaiappan Apr 22, 2022 11:44 PM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் தனது புதிய தொழில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நடிகை வனிதா விஜயகுமா சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார். 2 மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அது விவாகரத்தில் முடிந்தது. இதனிடையே நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அவர்,  2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.  இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். 

மேலும் வனிதா கடந்தாண்டு  அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை தொடங்கியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஃபேஷன் டிசைனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஃபேஷன் ஷோவில் தான் சிகைஅலங்காரம் செய்த பெண்ணுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். \