“நீங்க வனிதா பையனா? - இல்லை” - ரசிகரின் கேள்விக்கு பளிச்சென பதில் சொன்ன மகன்: வருத்தத்தில் வனிதா விஜய்குமார்!
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சிக்கி வருகிறார்.
2 மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அது விவாகரத்தில் முடிந்தது. இதனிடையே நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அவர், 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இது தவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் வனிதா கடந்தாண்டு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை தொடங்கியிருந்தார். தற்போது ஃபேஷன் டிசைனராகவும் வனிதா அவதாரம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் திருமணத்தின்போது பிறந்த தன்னுடைய மகன் ஸ்ரீஹரி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், ‘என்னுடைய முதல் காதல் என்றும் நீதான். அன்பு எப்போதும் அளவற்று இருக்க வேண்டும், தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்புதான் தூய்மையானது. ஒரு அம்மாவாக இது என் 21வது பிறந்தநாள். என் முதல் மகன் ஸ்ரீஹரி பிறந்து 21 வயதை கடந்துள்ளான்.
என்னுடைய அழகான திறமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் நீ என் லட்டு தான். உன் கனவுகள் அழைத்தும் நிறைவேற கடவுள் உன்னை ஆசீர்திக்கட்டும்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் ஒருவர் வனிதாவின் மகனை டேக் செய்து நீங்கள் வனிதாவின் மகனா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீஹரி, நான் ஆகாஷின் மகன் என பதிலளித்து வாயடைக்க செய்தார்.
வனிதா மீதான கோபத்தைத்தான் மகன் இவ்வாறாக வெளிப்படுத்தியதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.