எனக்கு அந்த நோய் இருக்கு; பயத்தினால் பாத்ரூம் கூட போக மாட்டேன் - வனிதா பளீச்
நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு இருக்கும் நோய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், னக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் இருக்கிறது. இது என்னுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களுக்கு தெரியும்.

சின்ன இடங்களில் என்னால் இருக்க முடியாது. லிப்ட்டில் நீண்ட நேரம் இருக்க முடியாது. கழிப்பறை கூட அப்படி தான். நான் பொது கழிப்பறைக்கு செல்லவே மாட்டேன். எனக்கு அங்கே போகவே பயம். இரண்டு நாள் வரை கூட கழிப்பறைக்கு போகமால் இருப்பேன்.
வேதனை
நான் கேரவனில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்தவே மாட்டேன். உடை மாற்றிவிட்டு உடனே அங்கிருந்து வந்துவிடுவேன். பிக் பாஸில் கூட கிளாஸ்ட்ரோஃபோபியா சூழ்நிலை தான். இதில் தாக்குப்பிடிக்கும் சந்தர்ப்பம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுப்படும்.

என் வாழ்க்கையும் அதே போல் தான். நான் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டேன் என்றால் அங்கு இருக்கமாட்டேன். அவர்கள் வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil