பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை வனிதா - கோபத்தில் எடுத்த சபதம்

vanithavijayakumar கமல்ஹாசன் biggbossultimate வனிதாவிஜயகுமார்
By Petchi Avudaiappan Jan 30, 2022 07:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை வனிதா விஜயகுமார் கலந்து கொண்ட நிலையில் அவர் கண் கலங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி முடிவடைவதற்குள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கிய நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. 

24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ள நிலையில், முதல் போட்டியாளராக நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். 

வீட்டில் சண்டை என்றாலும் சரி, சமாதானம் என்றாலும் சரி முதல் ஆளாக இருப்பவர் வனிதா என கமல் சொல்ல, அதற்கு பதிலளித்த வனிதா ஏதோ விட்ட குறை, தொட்ட குறை போல. மூன்றாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறேன். முதல் முறை வந்த போது என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வந்தேன் என கூறினார். 

பின் அவருக்காக ஒளிபரப்பான வீடியோவில் 40 நிமிடம் வனிதா பேசினாலே தாங்க முடியாது. இதில் 24 மணி நேரமும் இவர் பார்க்க வேண்டும் என பலர் நினைக்கலாம். கமெண்ட்ஸ் போடுவார்கள். போடட்டும். வச்சு செய்யுங்க. நல்லா திட்டுங்க. இஷ்டம் போல் என்ஜாய் பண்ணுங்க என கூறுகிறார். பின் கமல் ஒரு தேன் பாட்டிலை வனிதாவுக்கு பரிசாக வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்கு சென்ற வனிதா உணர்ச்சி மிகுதியில் கண்கலங்கி அழுதார். பின் அவர் செருப்பை கழற்றி விட்டு பிக்பாஸ் வீட்டின் தரையை தொட்டு இருகை கூப்பி வணங்கினார். வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் அவரது அதிரடி ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.