திடீரென மதம் மாறிய வனிதா விஜயகுமார் - காரணம் என்ன தெரியுமா?

buddhism vanithavijayakumar buddhamcharanamgacchami
By Petchi Avudaiappan Mar 29, 2022 07:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை வனிதா விஜயகுமார் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, மாணிக்கம், சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தவர்.  இவருக்கும் பிரபல நடிகர் ஆகாஷூக்கும் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷை வனிதா பிரிந்தார். 

தொடர்ந்து ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வனிதா விஜயகுமார் ஆனந்தராஜை பிரிந்தார்.

இதனையடுத்து வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த குடும்ப வாழ்க்கையும் அவருக்கு கசந்தது.இதற்கிடையில்  யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தளங்களிலும் கலக்கி வரும் வனிதா தான் பின்பற்றும் மதம் குறித்த அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நான் சில வருடங்களுக்கு முன்பே புத்த மதத்தை பின்பற்றினேன். அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய எதுவுமே இல்லை என கூறி புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.