வனிதா விஜயகுமாரின் அடுத்த அவதாரம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா விஜயகுமார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார் சினிமா, சின்னத்திரை, யூட்யூப் சேனல் ஆகியவற்றில் பிசியாக இருந்து வருகிறார். தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படத்திலும், பவர்ஸ்டாருக்கு ஜோடியாக ’பிக் அப் ட்ராப் ’படத்திலும் வனிதா நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் வனிதா மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் வெற்றிகரமாக ஜீ தமிழ் சேனலில் ஓடிக்கொண்டிருக்கும் திருமதி ஹிட்லரில் தான் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அவரது கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.