‛நீங்க ஒரு இந்தியரா...?’ - நடிகை வனிதாவின் செயலுக்கு இணையவாசிகள் விமர்சனம்
‛மலபார் பீஃப் பிரியாணி’ தயார் செய்யப்போகிறேன் என நடிகை வனிதா விஜயகுமார் சொன்னாலும் சொன்னது அவருக்கே எதிராக் திரும்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை வனிதா தனது யூடியூப் பக்கத்தில் அவர் சமைத்து வெளியிட்ட வீடியோ வெளியாவதற்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதற்கு காரணம், இன்று இரவு தனது யூடியூப் சேனலில் ‛மலபார் பீஃப் பிரியாணி’ செய்யப் போகிறேன் என் அவர் இன்ஸ்டாவில் அறிவித்தது தான். இது ஒன்று போதாதா... வனிதா இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு எதிராக பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
நீங்கள் ஒரு இந்துவா? இந்தியாவில் இருந்து பீப் பிரியாணி சாப்பிடலாமா? என்றெல்லாம் வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் வனிதாவுக்கு எதிராக படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ‛நீங்க பீஃப் சாப்பிடுவீங்களா....? என்றெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்தனர்.
இவர் வீடியோ வெளியிடும் முன்பே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால், நேற்று இரவு அவரது வீடியோ வெளியாகிவிட்டது. அப்படியென்றால் பிரச்சனை இனிமே தான் பற்றி எரியும் என நினைக்கிறேன்.
ஆனால் வனிதா இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவர் இல்லை. வீடியோ வெளியிட்ட பின் அவர் பதிலடி தருவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். மலபார் பீஃப் பிரியாணி... வனிதாவை இனி வேறு லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்றே தெரிகிறது.