"இளமையில் முட்டாளாக இருந்து விட்டேன்" திடீரென, அப்பா சாயல் வந்துவிட்டது.. - நடிகை வனிதா பரபரப்பு பேட்டி
எஸ்.கே.முரளீதரன் இயக்கத்தில் உருவாகி வரும்" தில்லு இருந்தா போராடு " படத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.
இப்படத்தில் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா ஜோடியுடன் யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே. பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர், இவர்களுடன் ராஜசிம்மா, ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர். பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோ பி ஆகியோரும் நடித்துள்ளனர்.
பல முன்னனி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள எஸ்.கே. முரளீதரன் "தில்லு இருந்தா போராடு" படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் சென்னை வடபழனியில், அவர் நடித்த தில்லு இருந்தா போராடு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில், பங்கேற்று பேசிய நடிகை வனிதா, தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பின், அதிக நெகட்டிவ் கதாபாத்திர வாய்ப்புகள் வந்ததாகவும், அது முத்திரையாகிவிடும் என்பதால் பயந்ததாகவும் கூறினார்.
மேலும், படப்பிடிப்பின் போது, திடீரென அப்பாவின் சாயல் வந்ததை நினைத்து பெருமை கொள்வதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
தில்லு இருந்தா போராடு படத்தில், புடவை கட்டியபடி புல்லட் ஓட்டிய போதும், அதை எட்டி உதைப்பது போன்ற பல்வேறு பரபரப்பான காட்சிகள் உள்ளதாகவும் கூறினார். சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கிய தனக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்த மீடியாவுக்கு நன்றி என்றும் வனிதா தெரிவித்தார்.