ஜோவிகா மேல ரொம்ப கோபம் வருது; ஏன் அப்படி..? கடுப்பான வனிதா விஜயகுமார்!
வனிதா விஜயகுமார், மகள் ஜோவிகா குறித்து பேசியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார்,
மக்களை தூண்டிவிடுவதற்காகவே பொய்யான ஒரு காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். விசித்ரா பிளான் பண்ணி தான் கேம் விளையாடுகிறார்கள்.
ஜோவிகா மேல் கோபம்
பிரதீப் வெளியேற்றப்பட்டபோது விசித்ரா கமலிடம் கேட்டு இருக்கலாம். அப்போது ஏன் கேட்கவில்லை. இருந்த வாரம் கண்டெண்ட் வேண்டும் என்பதற்காக தான் விசித்ரா அப்போது கேட்காமல் இருந்து இருக்காங்க. விசித்ரா டெண்டுல்கர் அளவுக்கு சூப்பர் கேம் விளையாடுகிறார்.
நான் விசித்ரா, மாயா மற்றும் கூல் சுரேஷ் ஃபேன். மாயா வில்லாதி வில்லன் போன்ற கேப்டன். எனக்கு ஜோவிகா மேல ரொம்ப கோவம் வருது. கண்டெண்டுக்காக எதுக்கு அர்ச்சனாகிட்ட தேவையில்லாமல் பேசனும்.
ஜோவிகா பேச்சுவார்த்தையை ரொம்ப வளர்க்காமல் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் எல்லாருமே அடிச்சிட்டு இருக்காங்க. அது பார்க்கும்போது சிரிப்பு தான் வருது” எனத் தெரிவித்துள்ளார்.