திருமணத்திற்கு ரெடியான வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள மூவி அப்டேட் வைரலாகி வருகிறது.
வனிதா விஜயகுமார்
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
வைரல் போஸ்ட்
அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார்.
தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் சுபமுகூர்த்தம் என்ற பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு மாலை 5.55 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
அந்தப் போஸ்டரில் வனிதாவும், ராபர்ட்டும் மண கோலத்தில் இருக்கிறார்கள். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.