விக்ரமனுக்கு ஆதரவு - திருமாவை கண்டித்த வனிதா!

Thol. Thirumavalavan Bigg Boss Vanitha Vijaykumar
By Sumathi Jan 19, 2023 09:05 AM GMT
Report

அரசியல் தலைவர் ஆதரவாக பேசுவது சரியா? என்று நடிகை வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமாவளவன் ட்வீட்

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதி சுற்று இந்த வாரம் நடைபெற உள்ளது. விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதற்காக நேரம் இப்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசிக கட்சியை சேர்ந்த விக்ரமன் பிக்பாஸ் 6-யின் போட்டியாளராக உள்ளார்.

விக்ரமனுக்கு ஆதரவு - திருமாவை கண்டித்த வனிதா! | Vanitha Thiruma Tweet About Big Boss 6 Vikraman

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை வெற்றிபெற வைக்க, அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் ட்வீட் செய்திருந்தார்.

வனிதா கேள்வி

இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கண்டங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து, நடிகை வனிதா “மதிப்பு நிறைந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சி தலைவர் மற்றும் எம்.பி எப்படி, பிக்பாஸ் போட்டியாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற முடியும்.

இதை அரசியல் ஆதாயம் என்றுதான் அழைக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.