ஸ்ரீதேவி பயங்கரமான ஃபிராடு...அம்மாவ பயங்கரமா ஏமாத்துன - போட்டுடைத்த வனிதா!!
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை வனிதா விஜயகுமார் தனது தங்கை ஸ்ரீதேவி விஜயகுமார் குறித்து சொன்ன கருத்துக்களை வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
90-களில் சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார், சில ஆண்டுகள் முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சி அவருக்கு மீண்டும் கொடுத்த அறிமுக தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார்.
அவ்வப்போது தனது குடும்பம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேட்டியளித்து வரும் வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தங்கை ஸ்ரீதேவி குறித்து சில கருத்துக்களை கூற அது மிகவும் வைரலாகி வருகின்றது.
ஸ்ரீதேவி சரியான ஃபிராடு
அந்த பேட்டியில், சின்ன வயசுல இருந்தே தன் அம்மா மஞ்சுளா தன்னையும் தன் தங்கச்சி பிரீத்தாவையும் அடிச்சு தான் வளர்த்தாங்க என குறிப்பிட்டு, ஆனால் கடைசி தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் அம்மா எப்பவுமே அடிக்க பயப்படுவார் என கூறினார்.
அதற்கு காரணம் குழந்தையாக இருக்கும்போதே ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவாள் என தெரிவித்த வனிதா, சின்ன வயசுல இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு - கோபம் வந்தால், ரூமுக்குள் சென்று கதவை பூட்டி கொள்வார், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் போட்டு உடைப்பா என்றார். நல்ல ட்ராமா பண்ணி அனைவரையும் ஸ்ரீதேவி ஏமாற்றிவிடுவார் என கூறி அதன் காரணமாகவே ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டாங்க என வனிதா கூறியுள்ளார்.