நான் கொரோனா தேவியா?... நடிகை வனிதா விஜயகுமார் புலம்பல்

Vanitha vijayakumar Corona devi statue
By Petchi Avudaiappan May 22, 2021 06:44 AM GMT
Report

கோவையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிலையின் முகம் அப்படியே வனிதா விஜயகுமார் முகத்தை போல இருப்பதாக சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்து சிலர் வழிபட்டு வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்த சிலையின் முகம் பல பிரபலங்களில் முகத்தை போல உள்ளதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தின. அதில் நடிகை வனிதா விஜயகுமார் சிக்கிக் கொண்டுள்ளார். 

இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், அடக்கடவுளே.. என்னது இது?.. இதை ஏன் எல்லோரும் எனக்கு அனுப்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பதிவு இணையவாசிகள் இடையே வைரலானது.