மாலத்தீவுகளில் வனிதா: 5வது தேனிலவா என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

actress heroine honeymoon
By Jon Jan 25, 2021 03:50 PM GMT
Report

மாலத்தீவுகளுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் வனிதா விஜயகுமார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை படுமோசமாக விமர்சித்துள்ளனர். மாலத்தீவுகளுக்கு சென்ற வனிதா,வனிதாவை விளாசும் நெட்டிசன்ஸ் பிரபலங்கள் பலர் மாலத்தீவுகளுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, வேதிகா உள்ளிட்ட சிலர் மாலத்தீவுகளுக்கு சென்றனர். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன் மகள்களுடன் மாலத்தீவுகளுக்கு சென்றார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார்.

புகைப்படங்களில் வனிதா சந்தோஷமாக காணப்படுகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ஆதரவாளர்களோ, எப்பொழுதும் இது போன்றே சந்தோஷமாக இருங்க அக்கா. மாலத்தீவுகள் வெறும் ஆரம்பம் தான். இனி நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றிப் பார்க்கப் போகிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் சமூக வலைதளவாசிகளோ வனிதா விஜயகுமாரை மோசமாக விமர்சித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, 5வது கணவருடன் மாலத்தீவுகளுக்கு தேனிலவுக்கு சென்றிருக்கிறீர்களா?. அங்கும் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்றே தெரியவில்லை.

ஓவராக குடிக்காதே அக்கா, குடி குடியை கெடுக்கும். முன்னதாக கோவாவுக்கு சென்ற இடத்தில் பீட்டர் பால் குடித்ததால் தான் நீங்கள் பிரிந்துவிட்டீர்கள். வயது வந்த இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும் என தெரிவித்துள்ளனர். வனிதா இன்ஸ்டாகிராமில் என்ன போஸ்ட் செய்தாலும் பாராட்டுபவர்களும் உண்டு, விளாசுபவர்களும் உண்டு.

லாக்டவுன் நேரத்தில் அவர் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு குடிப்பழக்கமே இல்லை என்று வனிதா கூறினார். இந்நிலையில் தான் வனிதா தன் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு பீட்டர் பால் மூக்கு முட்ட குடித்ததால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

சென்னை திரும்பிய பிறகு பீட்டர் பாலும், வனிதாவும் பிரிந்துவிட்டனர். பீட்டர் பாலை நம்பி ஏமாந்துவிட்டதாகக் கூறி வனிதா கண்ணீர் விட்டார். இதையடுத்து மகள்களுக்காக தைரியமாக இருக்கப் போவதாக தெரிவித்தார். வனிதாவின் இளைய மகள் ஜெயா அண்மையில் தான் பெரிய மனுஷி ஆனார்.

அந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து தன் வீட்டில் விசேஷம் நடந்த சந்தோஷத்தை ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.