வனிதாவின் அடுத்த காதலன் ரெடியா?
வனிதாவின் 5 வது காதலன் ஹரி நாடார் தான் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடமாடும் நகைக்கடையாக எங்கே சென்றாலும் வலம் வருகின்ற ஹரி நாடார் என்றால் தமிழகத்தில் தெரியாத ஆளே இல்லை. சமீபத்தில் இவர் ராகுல் காந்தியிடம் ஆங்கிலம் பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி அவரை தெரியாதவர்களும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை தேடி தந்திருக்கும்.
தற்போது ஹரிநாடார், 2K காதல் அழகானது எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். இந்த படத்தை முத்தமிழ் வர்மா இயக்கின்றார். இதை தயாரிப்பதும் ஹரி நாடார் தான். இதில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார் நடிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில், சாதி பிரச்சனை ஏற்படாமல் காதல் செய்வது குறித்து எடுக்க போகிறார்களாம். நிலைமை இப்படி இருக்க, ஹரி நாடார் நினைத்தால் பணம் கொடுத்து முன்னணி நடிகைகளை தனக்கு ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம்.
ஆனால், அவர் வனிதாவை தேர்வு செய்ய என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில் படக்குழுவினர் யாரும் இதுகுறித்து எந்த விதமான தகவலும் வெளியிடாமல் மௌனம் காக்கின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த ஒன்றில், வனிதாவின் ஐந்தாவது காதலான இருக்க தற்போது ஹரி நாடாருக்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்றும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.